மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். இது நியாயமான ஒரு ஆசை தான். ஆனால் அதற்காக நாம் தினமும் செய்ய வேண்டிய சில செயல்களை முறையாக செய்ய வேண்டும். இயற்கைக்கு மாறாக நடந்து கொள்வும் கூடாது. இயற்கையோடு இயந்து வாழக்கூடிய வாழ்வே ஆரோக்கியமான வாழ்வு ஆகும்.

ஆண்களுக்கு தினசரி வாழ்க்கையில் அதிக மன அழுத்தம், பதற்றம் போன்றவை வேலை இடங்களிலும், வேறு சில நபர்களாலும் உண்டாக அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே ஆண்கள் தங்களது உடல் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டியது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆண்களின் முக்கிய உடல்நலன் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பது தான் ஜின்சென் என்ற இந்த இயற்கை மூலிகை ஆகும். இது ஒரு வகையான வேர். இந்த ஜின்சென் மூலிகையின் மருத்துவ குணங்களை பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

சீனா-வை சேர்ந்த தாவரம்

ஜின்சென் என்ற இந்த மூலிகையானது சீனாவின் தாவர மருந்துகளில் மிகவும் பிரபலமாக கருதப்படுகிறது. இது சீனா, ரஷ்யா, வடகொரியா போன்ற இடங்களை சார்ந்தது. இது 7000 ஆயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் தொடந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜின்சென் என்ற மருத்துவ வேரினை அரேபியர்கள் 9-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். ஏனெனினும் இந்த மூலிகையானது கி.பி 18- ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தான் பிரபலம் அடைந்தது. இந்த தாவரத்தின் வேரானது பல மருத்துவ நன்மைகளை நமக்கு அளிக்கிறது.

மன இறுக்கம்

களைப்பு, மன இறுக்கம், மனசோர்வு, கால நிலை மாற்றங்களினால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றில் இருந்து தப்பிக்க இது உதவியாக உள்ளது. அதுமட்டுமின்றி இது தூக்கத்தை தூண்டி, நன்றாக ஆழ்ந்த உறக்கத்தை தரவல்லது. இந்த மூலிகையானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முக்கியமாக உதவுகிறது. கல்லீரலின் செயல்பாட்டை கூட்டுவதற்கும் இது உதவியாக உள்ளது. நோயினாலும், வயோதிகத்தாலும் உண்டான பலவீனத்தை போக்குவதற்காக இது பயன்படுகிறது.

விளையாட்டு வீரர்களுக்கு பயன்படும்

பொதுவாகவே விளையாட்டின் போது நமக்கு அதிகமான சக்தி தேவைப்படுகிறது. சீனாவில் ஓட்டப்பந்தைய வீரர்களுக்கு ஊக்கமளிக்கவும், வலுவை கொடுக்கவும் இந்த ஜின்செங் வேரினை பயன்படுத்துகிறார்கள். உடல் இறுக்கத்தை போக்க இது உதவுகிறது. இது பாலூணர்வை தூண்டும் ஒரு ஊக்குவிப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது.

குளிர் மிகுந்த நாடுகளில் குளிரை தாங்குவதற்கு இதனை பயன்படுத்துகிறார்கள். உடல் வலுவினை அதிகரிப்பதற்கும், மன இறுக்கத்தில் இருந்து வெளிப்படுவதற்கும் இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

விறைப்பு தன்மை பிரச்சனை

ஜிஞ்செங் எனப்படும் இந்த மூலிகை வேரானது, ஆண்களுக்கு உண்டாகும் விறைப்பு தன்மை பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது. பொதுவாக ஆண்களுக்கு அவர்களது 40 வயதில் 5% விரைப்பு தன்மை குறைய ஆரம்பிக்கிறது, அதன் பின்னர் ஒரு ஆண் 70 வயதை அடையும் போது விரைப்பு தன்மையின் அளவு 15 சதவீதம் வரை குறைந்து விடுகிறது. ஆனால் இந்த ஜின்செங்கை எடுத்துக் கொள்ளும் ஒருவருக்கு உடலில் ஹார்மோன் மற்றும் இரத்த அழுத்த அளவை அதிகரிக்காமலேயே உடலுறவில் ஈடுபடும் திறனை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குளோக்கோஸ் அளவை அதிகரிக்க உதவும்

பொதுவாக ஆண்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த ஜின்சென் என்ற மூலிகையானது இரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவினை குறைப்பதன் மூலமாக இந்த பிரச்சனையை தீர்க்கிறது. ஆண்களுக்கு விரைப்பு தன்மை குறைவாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்று தான் சர்க்கரை நோய். இந்த ஜின்செங் மூலிகையானது ஆண்களின் விரைப்பு தன்மை மற்றும் சர்க்கரை நோய் இரண்டையும் ஒன்றாக தீர்த்து வைக்க உதவுகிறது.

எச்சரிக்கை!

இந்த ஜின்சென் என்ற மூலிகை வேரை தனியாக எடுத்துக் கொள்ள கூடாது. இதனை உணவுடன் சேர்த்து தான் சாப்பிட வேண்டும். இதனால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது சர்க்கரையின் அளவை மிகவும் அதிகமாக குறைத்து விடக் கூடிய வாய்ப்பு உண்டாகும். மேலும் இது மருந்தின் வேலைக்கு இடையூறு செய்யும். எனவே நீங்கள் மாத்திரை மருந்துகளை சர்க்கரை நோய்க்காக எடுத்துக் கொண்டு வந்தால், அதனுடன் சேர்த்து இந்த வேரை சாப்பிட கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெற்று தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

புற்றுநோய்க்கு மருந்து

புற்றுநோய்க்கு மருந்தாக இந்த ஜின்சென் என்ற மூலிகை வேர் பயன்படுகிறது. ஜின்செங்கில் உள்ள அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உங்களது உடலில் உள்ள செல்களை பாதுக்காக்கிறது. மேலும் இது மன அழுத்தத்தை தரக் கூடிய செல்களையும் தடுத்து கேன்சர் நோய் வராமல் உங்களை பாதுகாக்கிறது.

உடல் எடை குறைய

உட்ல எடை என்பது இன்றைய நவீன கால கட்டத்தில் பலரது முக்கிய பிரச்சனையாக உள்ளது. இந்த ஜின்சென் வேரானது உடல் எடையை கட்டுப்படுத்த உதவியாக உள்ளது. ஜின்செங் ஆனாது உடலில் உள்ள ஹார்மோன்கள், மெட்டபாலிசம் போன்றவற்றை சரியாக இயங்க வைப்பதன் மூலமாக உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நியாபக திறன்

வயதாக வயதாக நியாபக சக்தி குறைவதை பலர் உணர்ந்திருக்கலாம். அதுவும் ஆண்களின் மெனோபாஸ் சமயத்தின் போது அவருக்கு சர்க்கரை நோய் இருந்தால் அவருக்கு நியாபக மறதி வாய்ப்புள்ளது. ஆனால் அதிஷ்டவசமாக, இந்த சமயத்தில் வரும் நியாபக மறதியை வெல்ல உள்ள அபூர்வ மூலிகை தான் இந்த ஜிஞ்செங் ஆகும். மேலும் இது வயது முதிர்வால் வரும் பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவும் மிகச்சிறந்த மருந்தாகவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here