Home அரசியல் விஜய்யின் அரசியல் களம்… ஆளப்போறான் தமிழன்!

விஜய்யின் அரசியல் களம்… ஆளப்போறான் தமிழன்!

19
0

இளையதளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய், அரசியலில்
களம் காண்பது குறித்து விரைவில் அறிவிப்பாரா என அவரது ரசிகர்கள் மத்தியில்
எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல்
வெற்றிடத்தை அவரால் நிரப்ப முடியும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழக அரசியல், சினிமா துறையை மையமாகவே வைத்தே
சுழன்றுகொண்டிருக்கிறது என்றே கூறலாம். காரணம் என்னவென்றால், தமிழக
அரசியலில் ஆரம்பம் முதலே சினிமா துறையின் தாக்கம் தொடர்ந்து நீடித்துக்
கொண்டிருப்பது தான். கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்
இதில் குறிப்பிடத்தக்கவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

ஜெயலலிதாவின் மறைவும், முதுமையின் காரணமாக கருணாநிதியின் ஓய்வும்
தமிழக அரசியலில் மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்
காரணமாக, தமிழகத்தில் நீண்டகாலமாக ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளின்,
தலைமையாளர்களின் இடம் தற்போது வெற்றிடமாகி உள்ளது.

ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் வரையில் சத்தமில்லாமல் இருந்தவர்கள்,
அவரது மறைவிற்கு பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு
தயாராகியுள்ளனர். வாய்ப்புகள் வரும் போது, அதனை தக்கவைத்துக்கொள்ள
தயாராகியுள்ளனர் என்பதே சரி.

ரஜினிகாந்த் அரசியலில் குதிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் நீண்ட காலம்
காத்திருந்தனர். ஆனால், தடீரென களத்திற்குள் புகுந்த கமல்ஹாசன்,

ரஜினிகாந்த்திற்கு முன்னரே அரசியல் என்ட்ரி கொடுத்து தனது வேலையை
துரிதப்படுத்தினார்.

அதிகாரம் இல்லாத ஆளும் அரசு
தமிழக மக்களிடையே எந்தவித பலத்த ஆதரவும் இல்லாத கட்சியாக தமிழக
பாஜக உள்ளது.ஆனாலும், மத்திய பாஜக அரசிடம் அடக்கி வாசிக்கிறது எடப்பாடி
பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு. மத்திய அரசுடன் இணக்கமான
போக்கை கடைப்பிடிக்கிறது என்று கூறிக்கொள்ளும் அதிமுக அரசின் ஆட்சியை
பார்க்கும் போது, தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக
ஆட்சியா என்று கேள்வி எழுப்பும் வகையில் உள்ளது.

ஆனால், விஜய் மத்திய அரசை நேரடியாக விமர்சிக்கும் வகையில் மெர்சல்
படத்தின் மூலமாக, அனைவரையும் மெர்சலாக்கிவிட்டார். டிஜிட்டல் இந்தியா
குறித்தும், ஜி.எஸ்.டி. வரியையும் தாக்கிய வசனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில்
கரவொலியை பெற்றார். மெர்சல் படத்திற்கு பாஜக எதிர்ப்பு கொடுத்ததன்
மூலமாக, மெர்சல், எதிர்பார்த்ததைவிட அதிக அளவு ஹிட் அடித்தது
மட்டுமல்லாமல், மக்களின் மனதை எட்டிப்பிடித்தது.

சினிமாவில் சிறந்த நடிகர் என்ற பெயரில் இருந்த காலகட்டத்தில் விஜய்க்கு,
அரசியல் பாதையை காட்டினார் அவரது தந்தை எஸ்.ஏ சந்திர சேகர். அதன்படியே,
அரசியலில் தனது பயணத்தை மறைமுகமாக விஜய் எடுத்து வைத்தார். இதன்
பின்னர் தனது படங்களில் மூலம், வசனங்கள், பாடல்கள் போன்றவற்றில் சமூக
அக்கறை காட்டத் தொடங்கினார்.

அரசியல் தொடக்கம்
தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றி, கொடியையும் அறிமுகம்
செய்தார் விஜய். முதலில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய
திட்டமிட்டதாகவே தெரிகிறது. 2009-ம் ஆண்டில் புதுச்சேரியின் முதலமைச்சராக
இருந்த வைத்திலிங்கம் முன்னிலையில், தனது மக்கள் இயக்கம் மூலமாக
பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை கூட்டினார். மேலும்,
அப்பொதுக்கூட்டத்தின் மூலமாக நலத்திட்ட உதவிகளையும் வழங்கி மக்களிடம்
நற்பெயர் பெற்றிருந்தார். அப்போதே, தான் அரசியலுக்கு சரியான காலகட்டத்தில்
வருவேன் என்று கூறியிருந்தார். அந்த சமயத்தில் ராகுல் காந்தியை சந்தித்து
பேசினார் என்பதும் அதில் குறிப்பிடத்தக்கது.

கட்சிகளுடன் மோதல் போக்கு
காவலன் திரைப்பட பிரச்சனைக்கு பின்புலமாக திமுக இருப்பதாக கருதியதாலோ
என்னவோ, 2011-ம் ஆண்டு அதிமுக-விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர் விஜய்
ரசிகர்கள். ஆனால், அதிமுகவுடனும் அடுத்து மறைமுக மோதல் வந்துவிட்டது.

2013-ம் ஆண்டு 'தலைவா' திரைப்படத்திற்கு வந்தது சிக்கல். அப்படத்தில் "டைம் டு
லீட்" என்ற வாசகம் சிக்கலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இதனால்,
எந்த கட்சிக்கும் ஆதரவான நிலைப்பாடை எடுக்கக்கூடாது என்று முடிவு செய்தார்
விஜய். இவ்வாறு சிக்கல்கள் வரவே அரசியல் குறித்த பேச்சுகளை நிதானத்துடன்
கடைப்பிடித்தார்.

2016 சட்டமன்ற தேர்தலில் நடுநிலை வகிக்க விஜய் முடிவு

ஜல்லிக்கட்டு ஆதரவு
இதனிடையே, ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமானபோது, அதற்கு ஆதரவு
தெரிவித்து சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டார். அதில் விஜய்
பேசும் போது, "சட்டம் என்பது மக்களின் கலாச்சாரத்தையும், உரிமையையும்
பாதுகாப்பதற்கு தானே தவிற அதறை பறிப்பதற்கு அல்ல. தமிழனின் அடையாளம்
ஜல்லிக்கட்டு. எதையும் எதிர்பார்க்காமலும், யாருடைய தூண்டுதலும்
இல்லாமலும் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு

போராட்டத்திற்கு தலை வணங்குகிறேன். இதற்கு காரணமான பீட்டா அமைப்பு
வெளியேற்றினால் தான் தமிழகத்திற்கு மகிழ்ச்சி" என்றும் தைரியமாக
குறிப்பிட்டிருந்தார்.

ஜல்லிக்கட்டு ஆதரவு வீடியோ

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு விவகாரம், விவசாயிகள்
பிரச்சனை, போன்றவற்றிலும் விஜய் தொடர்ந்து தனது கருத்துகளை பதிவு செய்து
மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் எழுப்பினார்.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அதிமுக அரசு, மத்திய அரசு குறித்து வாய் திறந்து
விமர்சிக்கப்பட அச்சம் கொள்வதாகவே விமர்சனங்கள் எழுகின்றன. ஆனல், கட்சி
சார்பில்லாமல் தனது படத்தின் மூலம், மக்கள் சார்ந்த பிரச்சனைகளை
பிரதிபலிக்கும் வகைளில் 'நச்' வசனங்களை படத்தில் கொண்டு வந்து அசத்தினார்
விஜய். இது போன்ற வசனங்கள் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று
தெரியாமலா, விஜய் வசனங்கள் பேசியிருப்பார் என்பதை சிந்திக்க வேண்டும்.

விளம்பரம் இல்லாத அரசியல்
சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், கலவரம் எனகூறி
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பலரின் உயிரை குடித்த ,இந்த சம்பவம், தமிழக
மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன்பின்னர், ஆறுதல்
தெரிவிக்க சென்ற ரஜினிகாந்த், விளம்பரம் தேடுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், விஜய் அவ்வாறு நடந்து கொள்ளாமல் இரவோடு இரவாக சென்று
பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து பேசினார். விஜயின் இதுபோன்ற செயல்
மக்களை மேலும் ஈர்க்கும் வகையில் அமைந்து.

சூப்பர் ஸ்டார் ஆன்மீக அரசியல் என்று கூறிக்கொள்வதால் அவரின் பின்புலத்தில்
பாஜக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மேலும், இதுவரை
தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்தபோதெல்லாம் அமைதியாக இருந்த
ரஜினிகாந்த், திடீரென அரசியல் களம் புகுவது ஏன் எனவும் கேள்விகளும்
அவரிடம் முன்வைக்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here