Home வாழ்க்கை முறை ஆரோக்கியம் அளிக்கும் 5 உணவுகள்… உண்டுவந்தால் உடல் வலுபெறும்!

ஆரோக்கியம் அளிக்கும் 5 உணவுகள்… உண்டுவந்தால் உடல் வலுபெறும்!

17
0

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது அனைவரும் அறிந்த பழமொழியே. ஆரோக்கியம் இருந்தால் தானே எதுவாக இருந்தாலும் அதனை அனுபவிக்க முடியும். உயர் பதவி வகிப்பவர்களாக இருக்கட்டும், கல்வியில் சிறந்த ஞானியாக இருக்கட்டும், உழைப்பாளிகள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களுக்கு ஆரோக்கியம் மட்டும் இல்லையெனில் அவர்களது கல்வி, உழைப்பு, நாவன்மை என அனைத்துமே உலகிற்கு பயன்படாத ஒன்றாகிவிடும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை போல ஆரோக்கியம் இருந்தால் தான் அனைத்தும் சாத்தியப்படும்.

பழங்காலத்தில் மக்களை அச்சுறுத்திய நோய்கள் பலவற்றிற்கு நவீன யுகத்தில் பல்வேறு புதிய மருந்துகள் தீர்வாகியுள்ளன. ஆனாலும், அவ்வப்போது புதுபுது நோய்களும் உருவாக, அதனை முறியடிக்கும் முனைப்பில் மருத்துவ உலகம் சென்று கொண்டிருக்கிறது. நோய்கள் நம்மை தாக்கிய பின்னர் அதற்கான பாதுகாப்பு வேலைகளை செய்வதை தவிர்த்து, வருமுன் காப்பதே சிறந்தது. ஆகவே, ஆரோக்கியமான வாழ்வை அனுபவிக்க நமது உடலை பேணி காப்போம்.

நமது உடலுக்கு தேவையான 5 அட்டகாசமான உணவு என்ன என்பதை தற்போது அறிந்து கொள்ளலாம் வாருங்கள். எந்த உணவையும் எடுத்த ஒரே நாளில் இளமையாகவும், ஆரோக்கிமாகவும் மாற்றிவிடாது. நீண்ட காலம் சரியான உணவை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் அதற்கான மாற்றத்தை காண முடியும் என்பதே உண்மை. உணவு மட்டுமல்ல அதோடு சரியான உடற்பயிற்சி, போதுமான தூக்கம், மனஅழுத்தத்தை கையாளும் விதம், யோகா செய்தல், வாக்கிங் போன்றவையும் ஆரோக்கியத்தின் தூண்களே. இதனை எவ்வாறு தொடங்குவது என தெரியவில்லையா? வாருங்கள் அதற்கான 5 வகையான பெஸ்ட் உணவுகளை பார்ப்போம். இவை உடல் எடையை குறைப்பது, இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது மற்றும் தோலினை இளமையாக மெருகேற்றி பலன் அளிப்பதாகும்.

5ஓட்ஸ் (Oats)

மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது ஓட்ஸ்-க்கு தனியிடம் தான். காரணம் என்னவென்றால் கொலஸ்ட்ராலை குறைப்பதில் ஓட்ஸ் முதலிடத்தில் உள்ளது. ஓட்ஸ் உட்கொள்ளும் போது குறைந்தபட்ச உணவையே எடுத்துக் கொள்ள தூண்டுமாம். ஆகவே, இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பு குறைதல், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் எடை குறைதல் போன்றவை ஏற்பட்டுள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல், இதிலுள்ள காப்பர், துத்தநாகம் போன்ற நியாசின் போன்றவை தோலின் ஆரோக்கியத்திற்கு துணை நிற்கிறதாம்.

Back

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here