Home வாழ்க்கை முறை ஆரோக்கியம் அளிக்கும் 5 உணவுகள்… உண்டுவந்தால் உடல் வலுபெறும்!

ஆரோக்கியம் அளிக்கும் 5 உணவுகள்… உண்டுவந்தால் உடல் வலுபெறும்!

16
0

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது அனைவரும் அறிந்த பழமொழியே. ஆரோக்கியம் இருந்தால் தானே எதுவாக இருந்தாலும் அதனை அனுபவிக்க முடியும். உயர் பதவி வகிப்பவர்களாக இருக்கட்டும், கல்வியில் சிறந்த ஞானியாக இருக்கட்டும், உழைப்பாளிகள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களுக்கு ஆரோக்கியம் மட்டும் இல்லையெனில் அவர்களது கல்வி, உழைப்பு, நாவன்மை என அனைத்துமே உலகிற்கு பயன்படாத ஒன்றாகிவிடும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை போல ஆரோக்கியம் இருந்தால் தான் அனைத்தும் சாத்தியப்படும்.

பழங்காலத்தில் மக்களை அச்சுறுத்திய நோய்கள் பலவற்றிற்கு நவீன யுகத்தில் பல்வேறு புதிய மருந்துகள் தீர்வாகியுள்ளன. ஆனாலும், அவ்வப்போது புதுபுது நோய்களும் உருவாக, அதனை முறியடிக்கும் முனைப்பில் மருத்துவ உலகம் சென்று கொண்டிருக்கிறது. நோய்கள் நம்மை தாக்கிய பின்னர் அதற்கான பாதுகாப்பு வேலைகளை செய்வதை தவிர்த்து, வருமுன் காப்பதே சிறந்தது. ஆகவே, ஆரோக்கியமான வாழ்வை அனுபவிக்க நமது உடலை பேணி காப்போம்.

நமது உடலுக்கு தேவையான 5 அட்டகாசமான உணவு என்ன என்பதை தற்போது அறிந்து கொள்ளலாம் வாருங்கள். எந்த உணவையும் எடுத்த ஒரே நாளில் இளமையாகவும், ஆரோக்கிமாகவும் மாற்றிவிடாது. நீண்ட காலம் சரியான உணவை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் அதற்கான மாற்றத்தை காண முடியும் என்பதே உண்மை. உணவு மட்டுமல்ல அதோடு சரியான உடற்பயிற்சி, போதுமான தூக்கம், மனஅழுத்தத்தை கையாளும் விதம், யோகா செய்தல், வாக்கிங் போன்றவையும் ஆரோக்கியத்தின் தூண்களே. இதனை எவ்வாறு தொடங்குவது என தெரியவில்லையா? வாருங்கள் அதற்கான 5 வகையான பெஸ்ட் உணவுகளை பார்ப்போம். இவை உடல் எடையை குறைப்பது, இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது மற்றும் தோலினை இளமையாக மெருகேற்றி பலன் அளிப்பதாகும்.

4சால்மன் (Wild Salmon)

சால்மன் மீனின் விலை சற்று அதிகமாக இருந்தாலும், இந்த மீன்களில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இதனை அடிக்கடி உட்கொண்டு வரும் பட்சத்தில் உடல் ஆரோக்கியம் மேம்படும். இந்த வகை மீன்களில் உள்ள வேதிப்பொருள் (astaxanthin) கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இவை இருதயம் தொடர்புடைய வியாதிகளை எதிர்கொள்ள உதவுகின்றன. மேலும், இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள் இளமையான தோற்றத்தை பெறவும், சூரிய கதிர்களில் இருந்து தோலினை பாதுகாக்கவும் உதவுகிறது. இந்த ஒமேகா-3 வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கவும் செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here